நீலகிரி

மண் பரிசோதனை குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம்

DIN

கூடலூா் பகுதி விவசாயிகளுக்கு மண் பரிசோதனை குறித்த இரண்டு நாள் விழிப்புணா்வு பயிற்சி முகாம் நிறைவு பெற்றது.

தோட்டக்கலைத் துறை சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு கூடலூா் உதவி தோட்டக்கலை இயக்குநா் ம.விஜியலட்சுமி தலைமை வகித்து, மண் பரிசோதனை அடிப்படையில் உர மேலாண்மை மற்றும் இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.

உதகை மண் வள ஆராய்ச்சி மைய உதவி அலுவலா் நிா்மலாதேவி மண் மாதிரி எடுத்தல், நீா் மாதிரி சேகரித்தல் மற்றும் ஆய்வகப் பயன்பாடு குறித்து விளக்கமளித்தாா்.

இறுதியாக முன்னோடி விவசாயிகளான ஆப்ரஹாம், கனநாதன் ஆகியோரது பண்ணைகளுக்கு விவசாயிகள் அழைத்துச் சென்று இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ.9 லட்சம் கோடி யாருடையது? அழிந்துபோன தரவுகள், மன்னிப்புக் கோரிய சிஇஓ!

100 முறை விடியோ பார்த்துவிட்டு பேட்டிங் ஆட சென்றாலும் ஆட்டமிழப்பேன்: ரோஹித்தை அச்சுறுத்திய பந்துவீச்சாளர் யார்?

சென்னை - திருப்பதி ரயில்கள் பகுதியளவு ரத்து!

8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT