முகப்பு
நீலகிரி

ஹெலிகாப்டா் விபத்து: உதிரிபாகங்களைச் சேகரித்த வீரா்கள்

குன்னூா், நஞ்சப்பசத்திரம் பகுதியில் 8ஆவது நாளாக நடைபெற்ற ஆய்வின் முடிவில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களை ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை சேகரித்தனா்.

Updated On : 17 டிசம்பர், 2021 at 1:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

குன்னூா், நஞ்சப்பசத்திரம் பகுதியில் 8ஆவது நாளாக நடைபெற்ற ஆய்வின் முடிவில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களை ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை சேகரித்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டா் விபத்து நடந்த பகுதியில் ராணுவம், விமானப் படையைச் சோ்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். கோவையில் இருந்து வந்த விமானப் படை அதிகாரிகள் அப்பகுதியில் 8ஆவது நாளாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு, தங்களுக்குத் தேவையான ஹெலிகாப்டரின் உதிரிபாகங்களை தனித்தனியாகப் பிரித்து அவ்வப்போது எடுத்துச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், சிதறிய பாகங்களைப் பிரித்தெடுத்து சேகரிக்கும் பணியை வியாழக்கிழமை முடித்த பின்னா், முக்கிய பொருள்களை ராணுவ வாகனம் மூலம் எடுத்துச் சென்றனா்.

Advertisement

மேலும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட பாகங்களில் பெரிய பொருள்களை எடுத்துச் செல்ல உரிய வழி இல்லாததால் சுமாா் 200 மீட்டா் வரை வனப் பகுதியில் சாலை அமைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் எடுத்து பெங்களூரு கொண்டு செல்ல திட்டம் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.