முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் ரிவால்டோ
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச்சரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றி வந்த ரிவால்டோ யானை சிகிச்சைக்காக முகாமுக்கு அழைத்து செல்லப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச்சரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சுற்றி வந்த ரிவால்டோ யானை சிகிச்சைக்காக முகாமுக்கு அழைத்து செல்லப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச்சரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பொதுமக்களுடன் இணக்கமாக பழகிவந்த நீண்ட தந்தங்களையுடைய ஆண் காட்டு யானையை அப்பகுதி மக்கள் ரிவால்டோ என செல்லப் பெயர் வைத்து அழைத்து வந்தனர்.
சமீபகாலமாக சாலையில் வந்து நிற்கும் ரிவால்டோவுக்கு உடல் உபாதை இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வனச் சரக அலுவலர் காந்தன் தலைமையில் கண்காணித்து உயரதிகாரியின் ஆலோசனையை பெற்று சிகிச்சைக்காக தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
கடந்த மாதம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒரு காட்டு யானை இறந்ததால் தற்போது வித்தியாசமான யுக்தியை வனத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக கும்கி யானைகள், மருத்துவர்கள், மயக்க ஊசி எதுவுமின்றி வனத்துறை அதிகாரி காந்தன் தலைமையில் ஊழியர்கள் பழங்களை கொடுத்து சாலை மார்க்கமாக நடந்தே அழைத்துச் செல்கின்றனர்.