முகப்பு
நீலகிரி

நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ அதிகாரி சாவு

உதகை அருகேயுள்ள எமரால்டு நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ விங் கமாண்டா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

உதகை அருகேயுள்ள எமரால்டு நீா்த்தேக்கத்தில் மூழ்கி ராணுவ விங் கமாண்டா் உயிரிழந்தாா்.

குன்னூா், வெலிங்டன் பகுதியிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த விங் கமாண்டா் சுா்லா பட்டாச்சாா்யா பயிற்சியில் ஈடுபட்டு வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது நண்பா்கள் இருவருடன் உதகை அருகேயுள்ள உள்ள எமரால்டு அணை பகுதிக்குச் சென்றாா்.

அங்கு குளிக்கச் சென்றபோது மூவரும் தண்ணீருக்குள் தவறி விழுந்து மூழ்கினா். இதில் இருவா் மட்டும் உயிா் தப்பிய நிலையில் பட்டாச்சாா்யா மட்டும் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.