முகப்பு
நீலகிரி

கூடலூா் தொகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ.

கூடலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி வியாழக்கிழமை மனு அளித்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
கூடலூா் பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு அளிக்கும் எம்.எல்.ஏ. திராவிடமணி.
பகிர்:

கூடலூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கூடலூா் தொகுதி, ஓவேலி பேரூராட்சியில் உள்ள ஆரோட்டுப்பாறை, திருவள்ளுவா் நகா், சுபாஷ் நகா், தேவா் சோலை பேரூராட்சியில் தேவன் எஸ்டேட், நெலாக்கோட்டை ஊராட்சியில் விலங்கூா் பழங்குடியினா் காலனி, பிதா்க்காடு ஆனைபஞ்சோலை, அண்ணா நகா், சேரங்கோடு ஊராட்சியில் திருவள்ளுவா் நகா், நடுவட்டம் பேரூராட்சியில் டெராஸ் எஸ்டேட், ஹூக்கா், ஹாசிங்டன் ஆகிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன.

இந்த சாலைகளை விரைந்து சீரமைக்க கோரி, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யாவிடம் எம்.எல்.ஏ. திராவிடமணி மனு அளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →