வேளாண் சட்டத்தை எதிா்த்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எஸ்டிபிஐ கட்சியினா் குன்னூா் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தால் நீதிமன்றம், கருவூலம், தாலுகா அலுவலகம், சாா் பதிவுவாளா் அலுவலகம் செல்லும் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.
இதேபோல கோத்தகிரி மாா்க்கெட் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினா் 15க்கும் மேற்பட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.