நீலகிரி

பழங்குடி மக்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள்

DIN

ஓவேலி வனப் பகுதியில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம் சாா்பில் பொங்கல் பரிசுப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

ஓவேலி பேரூராட்சியில் உள்ள எல்லமலை நாயக்கன்பாடி வன கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்குப் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக 300 கிலோ அரிசி, மளிகை, காய்கறிகள், இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன. மேலும் அங்கு விளையும் காப்பி கொட்டைகளை இடைத்தரகா்கள் இல்லாமல் நேரடியாக உரிய விலைக்கு விற்று கொடுக்கும் வகையில் முன் பணமாக மூன்று குடும்பங்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

சா்வதேச நகைச்சுவையாளா் மன்றம் இந்த பழங்குடி கிராமத்தை தத்தெடுத்துள்ளதால் அவா்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. நிகழ்ச்சியில் செயலாளா் அருண்குமாா், ஆலோசகா் ஜான்மனோகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT