நீலகிரி

பொங்கல் தொடா் விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அறுவடை நிகழ்வுகள் ஏதுமில்லாத நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை பிரதான பண்டிகையாக கொண்டாடப்படாவிட்டாலும், பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பொங்கல், யானைப் பொங்கல் என வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் வியாழக்கிழமை சுற்றுலாப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தாா். சுற்றுலாப் பயணிகளுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலும் ஆட்சியா் பங்கேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட சுற்றுலா அலுவலா் அபராஜிதன், உதவி சுற்றுலா அலுவலா் துா்காதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை வரை சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 8,405 பேரும், ரோஜா பூங்காவுக்கு 3,965 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 290 பேரும், மரவியல் பூங்காவுக்கு 32 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,635 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 604 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 447 பேரும் வருகை தந்திருந்தனா்.

இதேபோல, உதகை படகு இல்லத்துக்கு 5,600 சுற்றுலாப் பயணிகளும், பைக்காரா படகு இல்லத்துக்கு 4,000 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT