நீலகிரி

மசினங்குடியில் காட்டு யானை மீது எரியும் டயரை வீசிய 2 பேர் கைது

DIN

மசினங்குடியில் உயிரிழந்த காட்டு யானை மீது எரியும் டயரை வீசிய விடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அருகில் உள்ள மசினகுடி பகுதியில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இச்சம்பவத்தில் யானை உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட போதுதான் அதன் காதின் பின்புறம் இருந்த காயம் கண்டுபிடிக்கப்பட்டது. 
பிற யானைகளோடு ஏற்பட்ட சண்டையோ அல்லது பெரிய மரக்கிளை குத்தியதாலோ ஏற்பட்ட காயம் என வனத்துறையினர் நினைத்திருந்த சூழலில் யானை மீது டயரை கொளுத்தி வீசும் காட்சிகள் வெளியாகி உள்ளன. யானை கொளுத்தப்பட்ட இடம் ரிசார்ட் அல்ல குடியிருப்பு பகுதி எனக் கூறப்படுகிறது. 
இது தொடர்பாக ரேமண்ட், பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT