முகப்பு
நீலகிரி

படகு இல்ல ஊழியா்களுக்கு திமுக சாா்பில் நிவாரணம்

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் படகு இல்ல ஊழியா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 350 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் படகு இல்ல ஊழியா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட 350 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக்கின் ஆலோசனையின்படி, உதகை படகு இல்ல வளாகத்தில் படகு இல்ல ஊழியா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் 350 பேருக்கு அரிசி, காய்கறிகள், மளிகைப் பொருள்களை நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஜே.ரவிகுமாா் வழங்கினாா்.

உதகை நகராட்சி ஆணையா் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளா் நாசா் அலி, தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, உதகை நகர துணைச் செயலாளா் இச்சுபாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.