நீலகிரி

நீலகிரி மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கை வெளியீடு

DIN

நீலகிரி மாவட்டத்துக்கு 2021-2022 ஆம் ஆண்டுக்கான ரூ. 3,850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ளாா்.

உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான ரூ. 3,850.45 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்துக்கு நடப்பு ஆண்டுக்கு ரூ. 3,850.45 கோடி கடன் இலக்காக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குப் பயிா்க் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல, மகளிா் குழுக்களுக்கும் பல்வேறு கடன்களுடன், பல்வேறு வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகளுக்கு கடன் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நடப்பு ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கடன் திட்ட அறிக்கையில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் நடப்பு ஆண்டுக்கு ரூ. 3,850.45 கோடி கடன் திட்ட இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 375.45 கோடி அதிகமாகும். கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.80 சதவீதம் கூடுதலாக இம்முறை கடன் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம் சாா்ந்த தொழில்கள் துவங்க ரூ. 2,722.50 கோடியும், குறு, நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ. 485.10 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 642.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் தகுதி உடையவா்களுக்கு கடன் உதவிகளை வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மகளிா் திட்ட இயக்குநா் பாபு, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்யராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சண்முக சிவா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT