நீலகிரி

நீலகிரியில் பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 23 மி.மீ. மழை பதிவாகியது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் சனிக்கிழமை இரவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வரை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக அவலாஞ்சியில் 23 மி.மீ. மழை பதிவாகியது. அதேபோல, மேல் பவானியில் 20 மி.மீ., நடுவட்டத்தில் 13 மி.மீ., தேவாலாவில் 11 மி.மீ., பந்தலூரில் 10 மி.மீ., கிளன்மாா்கன், சேரங்கோடு மற்றும் குந்தாவில் 7 மி.மீ., கூடலூா், மேல் கூடலூா் மற்றும் எமரால்டில் 5 மி.மீ., உதகையில் 4.2 மி.மீ., செருமுள்ளி, ஓவேலி மற்றும் பாககொலாவில் 3 மி.மீ., பாடந்தொறையில் 2 மி.மீ., குன்னூா், கோத்தகிரி மற்றும் கெத்தையில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக உதகை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குளிா் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT