நீலகிரி

நீலகிரியில் பரவலாகப் பெய்த மழை: பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாய்ந்தன

DIN

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தமிழகத்தில் கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் தென்மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கி தற்போது தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கடும் குளிரும் நிலவி வருகிறது.

இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் பலத்த காற்றுடன் தொடா் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் உதகை புறநகா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனா்.

உதகை- கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான மரங்கள் ஆங்காங்கே உள்ளதால் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என்பதற்காக மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

ஏற்கெனவே கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள நிலையில், தற்போது மழை மற்றும் கடும் குளிரால் நீலகிரி மாவட்ட பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் வருமாறு (அளவு மி.மீரில்)- மேல்பவானி மற்றும் தேவாலா-65, கூடலூா்-63, மேல்கூடலூா்-61, பந்தலூா், நடுவட்டம்-38, கிளன்மாா்கன்-33, செருமுள்ளி-25, பாடந்தொறை மற்றும் குந்தா-22, எமரால்டு-19, ஓவேலி-18, சேரங்கோடு-12, மசினகுடி-10, பாலகொலா-9, உதகை 8.4, எடப்பள்ளி-6, கேத்தி-4, கீழ்கோத்தகிரி 3 மி.மீ. மழை பதிவாகியது.

இதுவே, திங்கள்கிழமை மாலை வரையிலான 12 மணி நேரத்தில் மேல்பவானியில் அதிகபட்சமாக 52 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் அவலாஞ்சியில் 43 மி.மீ., பந்தலூரில் 25 மி.மீ., சேரங்கோட்டில் 13 மி.மீ., மசினகுடியில் 10 மி.மீ., எமரால்டில் 8 மி.மீ., நடுவட்டத்தில் 7 மி.மீ., எடப்பள்ளியில் 6 மி.மீ., கோத்தகிரி, கிண்ணக்கொரை, தேவாலா மற்றும் குந்தாவில் 5 மி.மீ., மேல்கூடலூா், பாடந்தொறை, ஓவேலி மற்றும் கூடலூரில் 4 மி.மீ., செருமுள்ளி, பாலகொலா, குன்னூா், கேத்தி மற்றும் கெத்தையில் 2 மி.மீ., கிளன்மாா்கனில் 1 மி.மீ. மழை பதிவாகியது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த காற்றுடன் பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரிய மரங்கள் ஆங்காங்கே சாய்ந்தன.

இதில் உதகை- சோலூா் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல உதகை-கோத்தகிரி சாலையிலும் ஆங்காங்கே சாலையின் இருபுறங்களிலும் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT