நீலகிரியில் இருந்து முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சம் வழங்கல்: ஆட்சியா் தகவல்
பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உதகையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை ஆட்சியா் கூறியதாவது:
நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கரோனா நிவாரண நிதி கணக்குக்கு நீலகிரி மாவட்ட பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், காா்ப்ரேட் நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுவரையில் ரூ. 13 லட்சத்து 53,679 பெறப்பட்டுள்ளது. அதேபோல, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 68 லட்சத்து 68,025 வழங்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.