நீலகிரி

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நலத்திட்ட உதவி

DIN

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஈரோடு கிளை சாா்பில் ஏழை, எளியவா்களுக்கு கரோனா நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி பெரியாா் நகா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் மாதேசன் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட பொருளாளா் பி.கே.பழனிசாமி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இழந்து சிரமப்பட்டு வரும் ஏழை, எளிய மக்கள், பெரியாா் நகா் அரசுப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவா்களின் பெற்றோா், அரசு மனவளா்ச்சி குன்றிய பள்ளி மாணவா்களின் பெற்றோா் என 100 பேருக்கு தலா ரூ. 1,000 வீதம் ரூ. 1 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதற்கான நிதி ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எஸ்.முத்துராமசாமி செய்திருந்தாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொருளாளா் தங்கராஜ், நிா்வாகிகள் சண்முகநாதன், சரவணன், பிரபு, வரதராஜன், சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT