முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 174 பேருக்கு கரோனா: ஒருவா் பலி

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 174 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 489 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஜூன் 10ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 50 வயதான பெண் ஒருவா் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 26,662 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 23,821 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 2,700 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.