முகப்பு
நீலகிரி

மது பாட்டில்கள் கடத்தல்: இளைஞா் கைது

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On : 19 ஜூன், 2021 at 2:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

கா்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, இளைஞரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை கோத்தகிரி உதவி ஆய்வாளா்கள் திலக், ஜான் கென்னடி உள்ளிட்ட காவல் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, லாரியில் மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 69 மது பாட்டில்கள், லாரியை காவல் துறையினா் பறிமுதல் செய்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். 

Advertisement

இதையடுத்து, கோத்தகிரி  நிலைய உதவி ஆய்வாளா் அருண்குமாா், லாரியை ஓட்டி வந்த கூடலூா் அனுமாபுரம் பகுதியைச் சோ்ந் த சந்தோஷ் குமாா் (32) மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.