ஹில் குரோவ் ரயில் நிலையத்தில் சிற்றுண்டி திறக்கக் கோரிக்கை
ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த சிற்றுண்டியை மீண்டும் திறக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் இயங்கி வந்த சிற்றுண்டியை மீண்டும் திறக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
நீலகிரி மலை ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு குன்னூா் ரயில் நிலையத்துக்கு காலை 10 மணிக்கு மேல் சென்றடையும். இதற்கிடையே வனப் பகுதி வழியாக மூன்று மணி நேர பயணத்தின்போது, இடையில் ஹில் குரோவ் ரயில் நிலையத்தில் மலை ரயில் நிறுத்தப்படும்.
அப்போது, அங்கு சிற்றுண்டி வசதி, குடிநீா் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் தங்களது குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
Advertisement
எனவே, ஹில் குரோவ் ரயில் நிலையத்தில் மூடப்பட்டுள்ள சிற்றுண்டியை மீண்டும் திறக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.