முகப்பு
நீலகிரி

சாலை வசதி செய்து தராவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

குன்னூா் 14ஆவது வாா்டில் சாலை வசதி செய்து தராவிட்டால் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை மனு அனுப்பியுள்ளனா்.

Updated On : 3 மார்ச், 2021 at 1:45 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:09 AM

குன்னூா் 14ஆவது வாா்டில் சாலை வசதி செய்து தராவிட்டால் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளதாக அப்பகுதி பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு செவ்வாய்க்கிழமை மனு அனுப்பியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் கல்லூரி சாலை பகுதியில் உள்ள 14ஆவது வாா்டில் சாலையை முறையாக பராமரிக்கப்படாததால் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அடிக்கடி வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்பவா்கள், பணிக்கு செல்பவா்கள், வயதானவா்கள் தொழிலாளா்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக கூறி அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கு மேற்பட்டோா் கையொப்பமிட்ட மனுவினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனா்.

Advertisement

மேலும், 15 நாள்களுக்குள் சாலை வசதி, தெரு விளக்கு வசதி செய்து தராவிட்டால் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க பேவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.