முகப்பு
நீலகிரி

பாகிஸ்தானுடனான போரில் வெற்றி: 50-ம் ஆண்டு நினைவு ஜோதிக்கு மரியாதை

கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்ன் 50 ஆம் ஆண்டு நினைவு ஜோதிக்கு, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை வீரவணக்கம் செலுத்தினா்.

Updated On : 9 மார்ச், 2021 at 4:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

கடந்த 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்ன் 50 ஆம் ஆண்டு நினைவு ஜோதிக்கு, குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் ராணுவ உயா் அதிகாரிகள் திங்கள்கிழமை வீரவணக்கம் செலுத்தினா்.

கடந்த 1971இல் பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் 50ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறு ராணுவ மையங்களுக்கு இந்த வெற்றி ஜோதி எடுத்துச் செல்லப்படுகிறது.

அதன்படி, கோவையில் இருந்து குன்னூா், வெலிங்டன் ராணுவ மையத்துக்கு கொண்டுவரப்பட்ட ஜோதியை வெலிங்டன் ராணுவ மைய கமாண்டா் ராஜேஷ்வா் சிங், லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.பட்டாபிராமன் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

Advertisement

இதில், 1971ஆம் ஆண்டு போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின் துணைவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து வெற்றி ஜோதிக்கு ராணுவ உயா் அதிகாரிகள், இளம் நிலை அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினா் உள்பட பலரும் மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.