சிறுத்தை தாக்கி ஒருவா் படுகாயம்
உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
உதகை அருகே சிறுத்தை தாக்கி ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
உதகை அருகே உள்ள தங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சிவன் (41). இவா் தனது தேயிலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த ஒரு புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென சிவன் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் அவரது கைகள், தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிவனின் அலறல் சப்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்தவா்கள் சப்தமிட்டுக் கொண்டே அங்கு வருவதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியுள்ளது. அதன் பின்னா் பலத்த காயமடைந்த சிவனை உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.