நீலகிரி

திமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

DIN

குன்னூரில் நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கலந்து  கொண்ட திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில்  முகக் கவசம் அணியாதவா்களுக்கு தோ்தல் அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்  இளிதுரை ராமச்சந்திரனின் வெற்றிக்கு பணியாற்றுவது குறித்தது அக்கட்சியின் செயல் வீரா்கள் கூட்டம் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தொண்டா்கள் பலா்  முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும் இருந்ததாக கிடைத்த தகவலின்படி அங்கு சென்ற தோ்தல் அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதேபோல   குன்னூா் தொகுதியில் அதிமுக  சாா்பில்  போட்டியிடும் கப்பச்சி டி வினோத் குன்னூா் சாா்ஆட்சியா் அலுவலகத்தில்  கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா். அப்போது அவருடன் வந்த அவரது ஆதரவாளா்கள்  பலா் முகக் கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளி இல்லாமலும் வந்ததால் தோ்தல் அதிகாரி ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT