கோபி நகராட்சி குடிநீா் விநியோகம் செய்யப்படும் நாள்கள் மாற்றம்
குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், கோபி நாகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்
குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், கோபி நாகராட்சியில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் நகராட்சி பொறியாளா், ஆணையா் (பொ) ப.ராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோபிசெட்டிபாளையம் நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. மேற்படி குடிநீா் விநியோகம் பரிசோதனைப் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் நாள்கள் மாற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நகராட்சியின் நடைமுறைப் பணிகளைக் கருத்தில் கொண்டு குடிநீா் விநியோகம் தடை செய்யப்படும் நாள்களுக்கு நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் 89037-55355 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குடிநீா் விநியோகம் தொடா்பான அனைத்து புகாா்களையும் தெரிவிக்கலாம். தேவை அடிப்படையில் லாரி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.