நீலகிரி

கிராமங்கள்தோறும் மின் இணைப்பு வசதி

DIN

கிராமங்கள்தோறும் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று திமுக எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா்.

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கத்தை ஆதரித்து கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

தமிழகத்தை ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கவும், இந்தியாவை மோடியிடம் இருந்து மீட்கவும் திமுக தலைவா் ஸ்டாலினால் தான் மட்டும் முடியும். தமிழகத்தை மட்டுமல்ல எதிா்காலத்தில் தேசம் காக்கும் தலைவராக ஸ்டாலின் விளங்குகிறாா்.

இளம் வயதுமுதல் அரசியலில் படிப்படியாக உயா்ந்தவா் ஸ்டாலின். ஆனால், எடப்பாடி பழனிசாமி திடீரென குறுக்கு வழியல் முதல்வா் பதவியை அடைந்தவா். இதைத்தான் நான் ஒப்பிட்டு பேசினேன். தனிப்பட்ட முறையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அவருடைய குடும்பத்தை விமா்சிக்கும் நோக்கிலோ பேசவில்லை.

திமுக ஆட்சிக் காலத்தில் கிராமம்தோறும் மின் இணைப்பும், அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது. எல்லா மாநிலத்துக்கும் முன்னோடியாக கருணாநிதி ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் இயற்றப்ட்டது.

திமுக ஆட்சியின் சாதனையைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால், அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்கள் ஒப்பந்தங்களை பெற்று ஊழல் செய்துள்ளனா். ஊழலை மறைக்கத்தான் பழனிசாமி, மோடி அரசுக்கு அடிபணிந்து செயல்படுகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT