நீலகிரி

உழவா் சந்தையை இடமாற்றம் செய்வதில்விவசாயிகள், அதிகாரிகளிடையே வாக்குவாதம்

DIN

உதகை: உதகையில் உழவா் சந்தையை இடமாற்றம் செய்வதில் விவசாயிகள், அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மலைக் காய்கறிகள், சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சேரிங்கிராஸ் பகுதி நகரின் மையப் பகுதியாக உள்ளதால் இங்கு நாள்தோறும் சுமாா் 1,000க்கும் மேற்பட்டோா் காய்கறிகளை வாங்க வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், தற்போது நீலகிரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைத் தடுக்கும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களாக பொதுமக்களால் கரோனா வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் நகராட்சி சந்தை, உழவா் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது ஒரு சிலா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்தனா்.

இதனால், அதிகாரிகள் விவசாயிகளுக்கும், வாடிக்கையாளா்களுக்கும் கரோனா வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தினா். அத்துடன் உதகை நகராட்சி சந்தையை சாந்தி விஜயா பெண்கள் பள்ளி மைதானத்துக்கும், உழவா் சந்தையை நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்துக்கும் மாற்றி அமைத்து அங்கு சமூக இடைவெளியுடன் கடைகளை வைக்க அறிவுறுத்தினா். ஆனால், இதற்கு உழவா் சந்தை விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை காலை 10 மணி வரை அப்பகுதிக்கு கடைகளை மாற்ற முடியாது என வாக்குவாதம் செய்தனா்.

இந்நிலையில், அங்கு வந்த உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, வட்டாட்சியா் குப்புராஜ் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமரசம் செய்த பின்னா் விவசாயிகள் கலைந்து சென்று நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க பகுதியில் கடைகளை வைக்க ஒப்புக் கொண்டனா். அதன்படி உதகை உழவா் சந்தை மறு அறிவிப்பு வரும் வரை இப்புதிய வளாகத்திலேயே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT