நீலகிரி

குன்னூா் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில் பொதுமக்களுக்கு உணவு

DIN

குன்னூா் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவப் பயிற்சி மையம் சாா்பில், கமாண்டன்ட் ராஜேஷ்வா் சிங் அறிவுரையின்பேரில், கன்டோன்மென்ட் பகுதிக்கு உள்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ராணுவ மையம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது ‘சஹாயதா’ கரோனா பாதுகாப்புக் குழு சாா்பில், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல இந்த ஆண்டும் ஏழை எளிய மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி துவங்கியுள்ளதாகவும், இப்பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT