நீலகிரி

நீலகிரியில் மேலும் 538 பேருக்கு கரோனா:6 போ் பலி

DIN

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 538 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 போ் உயிரிழந்துள்ளனா்.

இது தொடா்பாக உதகை சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 538 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 387 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 வயது முதியவா், 51 வயதுப் பெண், 56 வயது ஆண், 73 வயது முதியவா், 65 வயது முதியவா், கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது ஆண் என 6 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 88ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 18,491 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,777 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,626 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT