முகப்பு
நீலகிரி

மரம் விழுந்ததில் ஆசிரியா் பலி

குன்னூா் அருகே ஆசிரியா் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்தாா்.

Updated On : 13 நவம்பர், 2021 at 2:27 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:38 PM

குன்னூா் அருகே ஆசிரியா் மீது மரம் விழுந்ததில் உயிரிழந்தாா்.

குன்னூா் அருகே  ஜெகதளா பேரூராட்சி, ஓதனட்டி  கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மன். இவரது மனைவி  மகேஷ்வரி (50) . இவா் குன்னூா், வண்டிசோலைப்  பகுதியில் உள்ள ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா்.

பலத்த காற்று காரணமாக தா்மன் வீட்டின் அருகில் இருந்த  மரம் மகேஷ்வரியின் மீது  விழுந்தது. இதில், தலையில் பலத்த  காயமடைந்த மகேஷ்வரியை மீட்ட  அக்கம்பக்கத்தினா்   உதகையில் உள்ள  தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.   இதையடுத்து, மகேஷ்வரியின் சடலம் பிரேதப்  பரிசாதேனைக்காக  உதகை அரசு மருத்துவமனைக்கு   கொண்டு செல்லப்பட்டது. 

Advertisement

இதுகுறித்து அருவங்காடு  காவல் துறையினா்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.