நீலகிரி

கோத்தகிரியில் கேரட் அமோக விளைச்சல்:விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை

 நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக   கேரட் விளைச்சல் அமோகமாக  இருப்பதால்  அறுவடைப் பணியில்  விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்

DIN

 நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக   கேரட் விளைச்சல் அமோகமாக  இருப்பதால்  அறுவடைப் பணியில்  விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இருப்பினும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மிளிதேன், கோ்க்கம்பை, ஈளடா, கைக்காட்டி ஆகிய பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட ஏக்கரில் கேரட்  பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பருவ மழையால் அதிக மகசூல் கிடைத்திருக்கும்  நிலையில், தற்போது சமவெளிப் பகுதிகளில் உள்ள சந்தைகளில் கேரட்டுக்கு குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.22ம், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.45 விலை கிடைத்து வருகிறது.

 மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட்டுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா். சமீப காலமாக சந்தைகளில் கேரட் ரூ.50 முதல் ரூ.60 வரை விலை கிடைத்த நிலையில், தற்போது ரூ.22 முதல் ரூ.45 வரை மட்டுமே விலை கிடைக்கிறது.

பருவ மழைக்கு  நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், உரிய  விலை கிடைக்காதது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT