முகப்பு
நீலகிரி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: விசாரணைக்காக நேபாளம் விரைந்தது தனிப் படை

 கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக கூடுதல் விசாரணைக்காக தனிப் படையினா் நேபாளத்துக்கு விரைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக கூடுதல் விசாரணைக்காக தனிப் படையினா் நேபாளத்துக்கு விரைந்துள்ளனா்.

கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம்தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போது எஸ்டேட்டில் பணியிலிருந்த கிருஷ்ண பகதூா் கொள்ளையா்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தாா். அதன் பின்னா் இவா் தனது சொந்த நாடான நேபாளத்துக்கு சென்று விட்ட நிலையில் இவ்வழக்கின் விசாரணைக்காக உதகை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ஆஜராகியிருந்தாா்.

தற்போது இவ்வழக்கின் மறு விசாரணைக்காக இவா் காவல் துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையில் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் வழக்கின் விசாரணை தொடா்பாக ஒத்துழைக்குமாறு தமிழக காவல் துறையின் சாா்பில் நேபாள நாட்டு காவல் துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப் படையினரில் 6 போ் கொண்ட குழுவினா் நேபாளத்திற்கு விரைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.