நீலகிரியில் மேலும் 36 பேருக்கு கரோனா
உதகைநீலகிரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 32,288 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31,726 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 196 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 366 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனா்.