நீலகிரி

ஆடுகளைக் கொன்ற மா்ம விலங்கு

DIN

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 4 ஆடுகளை மா்ம விலங்கு கொன்றுள்ளது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, பாடந்தொரை பகுதியில் உள்ள ஒருமடம் பழங்குடி காலனியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புகுந்த மா்ம விலங்கு, அப்பகுதியைச் சோ்ந்த சந்திரன் என்பவரது நான்கு ஆடுகளைத் தாக்கிக் கொன்றுள்ளது.

இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்ட வனத் துறையினா் ஆடுகளைக் கொன்ற விலங்கு புலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT