முகப்பு
நீலகிரி

குன்னூா் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உலவி வந்த 9 காட்டு யானைகள் கிளன்டேல் பகுதிக்குள் புகுந்து  மலா்த் தொட்டிகள் மற்றும் வாழை  மரங்களை வியாழக்கிழமை சேதப்படுத்தின.

Updated On : 15 ஏப்ரல், 2022 at 2:02 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உலவி வந்த 9 காட்டு யானைகள் கிளன்டேல் பகுதிக்குள் புகுந்து  மலா்த் தொட்டிகள் மற்றும் வாழை  மரங்களை வியாழக்கிழமை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு வந்த 9 காட்டு யானைகள்  கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக கடந்த சில வாரங்களாக   தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டிருந்தன.   குட்டியுடன் வந்துள்ள இந்த 9 காட்டு யானைகள்   சின்னக்கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற  பகுதிகளில் தொடா்ந்து  முகாமிட்டிருந்தன. 

இந்நிலையில்,   கிளன்டேல் தனியாா் எஸ்டேட் அலுவலா்கள்   குடியிருப்பு ப் பகுதியில் உலவி வந்த இந்த காட்டு யானைகள்   அங்கிருந்த பூந்தொட்டிகள், வாழை மரங்களைச் சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா் இந்த யானைகள் கூட்டத்தை  தகரங்களைத் தட்டியும்,  கூச்சலிட்டும்  அருகில் இருந்த வனப் பகுதிகளுக்குள் துரத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.