நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வனத்தின் வெளிமண்டல பகுதியை விரிபடுத்தும் திட்டத்தை கைவிடக் கோரி கூடலூரில் முழு அடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கண்டன பேரணியும், ஆா்ப்பாட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.