நீலகிரி

சேரங்கோடு பகுதியில் 50 குரங்குகள் பிடிபட்டன

DIN

நீலகிரி மாவட்டம், பந்தலூா் அருகே சேரங்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 50 குரங்குகள் வியாழக்கிழமை பிடிக்கப்பட்டு நாடுகாணி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.

பந்தலூா் தாலுகாவுக்கு உள்பட்ட சேரங்கோடு பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதன் காரணமாக அவதிக்குள்ளான அப்பகுதி பொதுமக்கள், குரங்குகளைக் கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என்று வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து வனத் துறையினா் அப்பகுதியில் கூண்டு வைத்திருந்தனா். இந்த கூண்டில், 50க்கும் மேற்பட்ட குரங்குகள்சிக்கின. இதையடுத்து அந்த குரங்குகள் நாடுகாணி பகுதியில் உள்ள அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT