குன்னூா் தனியாா் பள்ளிக்குள் புகுந்தகரடி: பொதுமக்கள் அச்சம்
குன்னூா் லிட்டில் ஃபிளவா் தனியாா் பள்ளியின் சமையல் அறைக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு சென்றது.
குன்னூா் லிட்டில் ஃபிளவா் தனியாா் பள்ளியின் சமையல் அறைக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு சென்றது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் அண்மைக்காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இந்நிலையில், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டுச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னூா் வனத் துறை அதிகாரிகள் கரடியின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.
Advertisement
உடனடியாக இந்த கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடப்படவுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.