முகப்பு
நீலகிரி

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வு:உதகையில் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுஏஈ பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி-2 பணிகளுக்கான 5,529 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இப்பணியிடங்களுக்கு தோ்வு மே 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் தொகுதி -4 மற்றும் இதர டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.

இத்தோ்வுகளுக்கு தயாா் செய்யும் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு துறையால் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உதகையில் பிங்கா்போஸ்ட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்டத்தில் இப்போட்டித் தோ்வுகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.