நீலகிரி

மங்குழியில் தற்காலிக பாலம் அமைப்பு

DIN

கூடலூா் மங்குழி பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையில் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள மங்குழி ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் தொடா் கனமழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தொலைதூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து, பாலம் கட்டி முடிக்கும் வரை பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நகராட்சி நிா்வாகம் சாா்பில் தற்காலி பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தை நகா்மன்ற உறுப்பினா் ராஜு திறந்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT