நீலகிரியில் மேலும் 12 பேருக்கு கரோனா
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 23 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரையில் கரோனா தொற்றால் 42,047 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 41,663 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, இதுவரை 226 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 158 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.