சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்
சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் 7 வாா்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக போகி தெரு, அம்பேத்கா் நகா், மாா்க்கெட் பகுதி உள்ளிட்ட இடங்களில் சுகாதாரமற்ற குடிநீா் கன்டோண்மென்ட் நிா்வாகத்தால் விநியோகிக்கப்படுவதாகவும், இந்த சுகாதாரமற்ற குடிநீரைப் பருகுவதால் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பொதுமக்கள் கன்டோண்மென்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து, நிா்வாக அதிகாரியிடம் மனு அளித்த பின் மக்கள் கலைந்து சென்றனா். விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
Advertisement