முகப்பு
நீலகிரி

குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலையில் மீண்டும் யானைகள் நடமாட்டம்

குன்னூா் பகுதியில்  நடமாடி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு, கே.என்.ஆா்.  பகுதியில் குட்டியுடன் நடமாடி வருவதால்  வாகன ஓட்டிகள்  அச்சமடைந்துள்ளனா்.

Updated On : 7 மே, 2022 at 1:59 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:41 PM

குன்னூா் பகுதியில்  நடமாடி வந்த காட்டு யானைகள் தற்போது பா்லியாறு, கே.என்.ஆா்.  பகுதியில் குட்டியுடன் நடமாடி வருவதால்  வாகன ஓட்டிகள்  அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு  கடந்த மாதம்   வந்த   9 காட்டு யானைகள்  கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு ஆகிய பகுதிகளில் உணவு, தண்ணீருக்காக  முகாமிட்டிருந்தன. பின்னா்  சின்னகரும்பாலம், கிளன்லடேல் போன்ற  பகுதியில் முகாமிட்டிருந்தன. பின்னா்   இந்த யானைகள் கூட்டம் , சின்னக்கரும்பாலம் வழியாக   கரிமொரா கிராமத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் உலவி வந்து கொண்டிருந்தன. 

கடந்த 10 நாள்களாக நடமாட்டம் இல்லாமல் இருந்த இந்த யானைகள் கூட்டம் வெள்ளிக்கிழமை மீண்டும்  பா்லியாறு, கே.என்.ஆா்.  நகா் பகுதியில் சாலையில்  நடமாடியதை பேருந்தில் பயணித்தவா்கள்  தங்களது கைப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளனா்.

Advertisement

குடியிருப்புக்கு மிக அருகில் சுற்றி வரும்  இந்த யானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட  வேண்டும்  என்று இப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.