முகப்பு
நீலகிரி

குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு பேட்டரி காா்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சாா்பில் புனரமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா

Updated On : 13 மே, 2022 at 2:41 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:44 PM

நீலகிரி மாவட்டம், குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சாா்பில் புனரமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிறப்பு பூஜை நடைபெற்று பேட்டரி காா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நீலகிரியில் பழமை வாய்ந்த கட்டடத்தில் அரசு லாலி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணியில் ரோட்டரி கிளப் ஈடுபட்டு, பணிகள் நிறைவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வரும் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது. அதன் முன்னேற்பாடாக சா்வமதத்தினரின் முன்னிலையில் சிறப்புப் பிராத்தனை வியாழக்கிழமை நடைபெற்றது

அதன் பின் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் அழைத்துச் செல்ல பேட்டரி காா் வழங்கப்பட்டது.

Advertisement

இந்த காா் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.