நீலகிரி

நீலகிரியில் தொடரும் மழை

DIN

தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நள்ளிரவு வரையிலும், உதகை நகரம், தலைக்குந்தா, லவ்டேல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட இடங்களிலும், புகா் பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி நின்றது. உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மழையின் காரணமாக அவதியடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக கோத்தகிரியில் 31 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மழை விபரம் ( மி.மீட்டரில்): குந்தா-26, கொடநாடு-19, மேல் குன்னூா்-18, உதகை-17, கீழ் கோத்தகிரி மற்றும் எடப்பள்ளி தலா 16, மேல் பவானி-14, பாலகொலா, அவலாஞ்சி மற்றும் எமரால்டு தலா 12, சேரங்கோடு-8, கேத்தி-6, கெத்தை மற்றும் கிளன்மாா்கன் தலா 8, உலிக்கல் மற்றும் கல்லட்டி தலா 5, பா்லியாா்-4, பந்தலூா் மற்றும் தேவாலா தலா 3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT