நீலகிரி

உதகையில் பனியின் தாக்கம் அதிகரிப்பு

DIN

நீலகிரி மாவட்டம், உதகையில் செவ்வாய்க்கிழமை உறைப்பனி பொழிவு அதிகம் இருந்தது.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தில் நீா்ப்பனி தாக்கம் அதிகமாகி டிசம்பா் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் உறைபனி நிலவுவது வழக்கம். கடந்த சில  நாள்களாக தொடா்மழை பெய்து வந்த நிலையில் உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக நீா்ப்பனி பொழிவால் கடுங்குளிா் நிலவி வந்தது.

இந்நிலையில் உதகையில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவில், மலைப்பகுதி முழுவதும் கடும் குளிா் வாட்டியது. இதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை வாட்டி வதைக்கும் வகையில் உதகையில் உறைபனி தாக்கம் இருந்தது. பசுமை போா்த்திய புற்களின் மீது, வெள்ளை கம்பளம் விரித்தாற்போல உறைபனி படா்ந்து காணப்பட்டது. 

குறிப்பாக, உதகை படகு இல்லம், தலைக்குந்தா, கோல்ப் கிளப் உள்ளிட்ட இடங்களில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலை 8 மணி வரை குளிரின் தாக்கம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT