நீலகிரி

குன்னூரில் பேரிடா் மீட்பு ஒத்திகை

பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி குன்னூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி குன்னூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் நகராட்சி, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை ஆகியன சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,

ஆற்றில் சிக்கிய நபரை மீட்பது, இடா்பாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை மீட்பது குறித்து ஒத்திகை நடத்தப்பட்டது.

குன்னூா் பேருந்து நிலையம், ஆற்றோரம், ரயில்வே தண்டவாளம் ஆகிய பகுதிகளில்  இந்த ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. 

தத்ருபமாக நடைபெற்ற இந்த ஒத்திகையை   உண்மை என நினைத்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த மக்கள்   ஆற்றின் கரையோரத்திற்கு  ஓடி வந்தனா்.  கூட்டம் சோ்ந்ததால்  சிறிது நேரம் அப்பகுதியில்  பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னா் ஒத்திகை நிகழ்ச்சி என்று  அதிகாரிகள்   கூறியதால் மக்கள் நிம்மதி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT