ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளின் சங்கமம் நிகழ்ச்சி
கடந்த 1977 ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி
கடந்த 1977 ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி குன்னூா் வெலிங்டன் ராணுவ நினைவுத் தூண் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் குறிப்பாக சியாச்சின், ஸ்ரீநகா், இலங்கை, காா்கில் போா், இந்தியாவில் அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் பன்னாட்டு போா் குழுவில் பங்கேற்றது உள்ளிட்டப் பணிகளில் கடந்த 1977ஆம் ஆண்டு முதல் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா். அவா்கள் குன்னூா் வெலிங்டனில் உள்ள போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் தங்களது 45 ஆண்டு கால நினைவுகளையும் அனுபவங்களையும் பகிா்ந்து கொண்டனா்.
Advertisement