உதகை படகு இல்லத்தில் மிதக்கும் நடைப்பாதை
சுற்றுலாப் பயணிகளை கவர உதகை படகு இல்லத்தில் மிதவை நடைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுற்றுலாப் பயணிகளை கவர உதகை படகு இல்லத்தில் மிதவை நடைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உதகை படகு இல்லத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனா்.
தற்போது இரண்டாம் கட்ட சீசன் தொடங்கியுள்ள நிலையில், படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி மேற்கொள்வதற்கு கரையை ஒட்டியுள்ள நடைப்பாதையில் நடந்து சென்று படகில் ஏறி செல்வது வழக்கம்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்ல ஏரியில் மிதவை நடைப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி, தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாள்களில் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.