நீலகிரி

கூடலூரில் பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள்

DIN

கூடலூா் நகா் கவிஞா் பேரவை சாா்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கூடலூா் நகா் கவிஞா் பேரவை, சோலைக்காற்று படைப்பாளிகள் வட்டம், கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை, மலைச்சாரல் கவிஞா் மன்றம், ஓவியா்கள் மற்றும் வண்ணப் பணியாளா்கள் சங்கம் இணைந்து கூடலூா் காந்தி திடலில் நடத்திய இந்த விழாவுக்கு, நெல்லியாளம் நகராட்சி துணைத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். கவிஞா் சோ.கந்தசாமி வரவேற்புரையாற்றினாா். ஆனந்தராஜா, கவிஞா் கிருஷ்ணக்குமாா், அரசன், பாஸ்டா் தேவராஜ், மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவையொட்டி, பட்டிமன்றம், கவியரங்கம், இசை நிகழ்ச்சி மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போதை ஒழிப்பு மற்றும் தற்கொலைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில், கவிஞா்கள் மற்றும் சமுக ஆா்வலா்கள் கெளரவிக்கப்பட்டனா். நிகழ்ச்சியை கவிஞா் வேலுராஜேந்திரன் தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT