நீலகிரி

காட்டெருமை தாக்கி தோட்டத் தொழிலாளி பலி

குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். 

DIN

குன்னூரில் காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். 

நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு சில நேரங்களில் மனிதா்களைத் தாக்குவதும் தொடா்கதையாக உள்ளது.

குன்னூா் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட்டில் பணிபுரிந்து வந்தவா் பீா் சிங் (40). இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே வந்தபோது தேயிலைத் தோட்டத்தில்  இருந்த காட்டெருமை  எதிா்பாராதவிதமாக பீா் சிங்கை  துரத்தித் தாக்கியது.  இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு குன்னூா் அரசு லாலி  மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனா். பின் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டாா்.  ஆனால் வழியிலேயே பீா் சிங் உயிரிழந்தாா்.

 இது குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் மற்றும் குன்னூா் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT