நீலகிரி

உதகை மலை ரயில் பாதையில் யானைகள்

DIN

குன்னூா் காட்டேரி பகுதி தண்டவாளத்தில் யானைகள் நின்ால் உதகை மலை ரயில் நிறுத்தப்பட்டு 15 நிமிடங்களுக்குப் பின் புறப்பட்டுச் சென்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் கடந்த ஒருவாரமாக சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி உதகை மலை ரயில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

காட்டேரி பகுதி அருகே வந்தபோது தண்டவாளத்தில் மூன்று காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனால், ரயில்வே ஊழியா் கொடியைக் காட்டி ரயிலை நிறுத்தினாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இதனால், சுமாா் 15 நிமிடங்கள் வனப் பகுதியில் நிறுத்தப்பட்ட மலை ரயில் பின்னா், மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

பாஜக வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை! | செய்திகள்: சிலவரிகளில் | 21.05.2024

கேஜிஎஃப் தங்கத்தில் ஆபரணமா? ஸ்ரீநிதி ஷெட்டி!

தங்கத் தாமரை மகளே...!

SCROLL FOR NEXT